Enable Javscript for better performance
சுற்றுச்சூழலைக் காக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நாம் இன்று சுற்றுச்சூழலைக் காக்கத் தவறினால் வருங்கால சந்ததியின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்றார் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணன்.

    அரியலூர் டால்மியா சிமென்ட் ஆலையில் அண்மையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

    புவி வெப்பமடைவதால் உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துக்குமே பாதிப்பு ஏற்படும். கடலால் நிலப்பரப்பு அரிக்கப்பட்டு கடலில் மூழ்கும் அபாயம் ஏற்படும். புவி வெப்பமாதலைத் தடுக்க மரம் நடுவது ஒன்றுதான் சிறந்த வழி. எனவே ஒவ்வொருவரும் மரம் நடுவதை தங்கள் கடமையாகக் கருதிச் செய்ய வேண்டும், மரத்தை நட்டால் மட்டும் போதாது. அதைப் பேணிக் பாதுகாத்து வளர்க்கவும் வேண்டும். சுற்றுச்சூழல் சீர்கேட்டை உணர்ந்து நாம் இன்றே அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் வருங்கால சந்ததியினரின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என்றார் அவர். முன்னதாக, சுற்றுச்சூழல் இணைத் தலைமை பொறியாளர் சுந்தர கோபால் தலைமையில் டால்மியா சிமென்ட் ஆலை ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  நிகழ்ச்சியையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் வசந்த், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நவாப்ஜான் ஆகியோர் பேசினர். ஆலைத் தலைவர் அனில்பஜாஜ், சுரங்கத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் ஆலை ஊழியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai