Enable Javscript for better performance
மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், சீருடை- Dinamani

சுடச்சுட

    

    ராம்கோ சிமென்ட் நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், சீருடைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

    அரியலூர் மாவட்டம், ஆலத்தியூர்  ராம்கோ சிமென்ட்ஸ்  தொழிலாளர்கள், அலுவலர்கள் இணைந்து ராம்கோ சமூக சேவை கழகம் என்ற தொண்டு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்தக் கழகத்தின் சார்பில் கிராம மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    ராம்கோ சிமென்ட் ஆலை மற்றும் சுரங்கத்தை சுற்றியுள்ள பள்ளி மாணவர்களை ஊக்கவிக்கும் பொருட்டு இலவச நோட்டுப் புத்தகங்கள், மற்றும் சீருடைகள் வழங்கும் விழா அண்மையில் ஈச்சங்காடு அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. சிமென்ட் ஆலையின் துணைத் தலைவர் சண்முகம், உதவித் துணைத் தலைவர் ராமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு தொளார்,மருங்கூர், இருங்களாக்குறிச்சி, மணக்குடையான், சோழன்பட்டி, புதுப்பாளையம், ஆதனங்குறிச்சி, முள்ளுகுறிச்சி, ஆலத்தியூர், சேந்தமங்கலம், ஈச்சங்காடு, தளவாய், செங்கமேடு, சிலுப்பனூர், மற்றும் மதுரா கிராமத்து பள்ளி மாணவர்கள், கடலூர் மாவட்டம், பெண்ணாடம்  வள்ளலார் கல்வி அறநிலைய மாணவர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட  எச்ஐவி  உள்ளோர் கூட்டமைப்பில் உள்ள எய்ட்ஸ் நோய் தாக்கியவர்களின் குழந்தைகளுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான நோட்டு, புத்தகங்கள், எழுதுப்பொருள்களை வழங்கினர்.

    சிலுப்பனூர், சோழன்பட்டி, மற்றும் மருங்கூர் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.

    மேலும் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற தளவாய் மற்றும் முள்ளுக்குறிச்சி  அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  பரிசளிப்பு விழா தளவாய் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை ஆலையின் துணைத் தலைவர் சண்முகம், உதவித் துணைத் தலைவர்(நிர்வாகம்) ராமராஜ், துணைப் பொதுமேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அலுவலர் அய்யாவு, ராம்கோ சமூக சேவை கழகச் செயலாளர் குமாரவேல் மற்றும் ஆலை ஊழியர்கள், அலுவலர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai