Enable Javscript for better performance
அரியலூர் நீதிமன்றத்தில் குரு எம்எல்ஏ ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசிய வழக்கில் குரு எம்எல்ஏ, அரியலூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.

    அரியலூரில் கடந்த 7-2-2013-ல் நடைபெற்ற பாமக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வன்னியர் சங்க மாநிலத் தலைவர் குரு எம்எல்ஏ தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகவும், மேலும் ஜாதி உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி அவர் மீது அரியலூர் அரசு வழக்குரைஞர் சண்முகம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இவ்வழக்கில் குரு எம்எல்ஏ திங்கள்கிழமை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் (ஜூலை) 16-ஆம் தேதிக்கு நீதிபதி கிருஷ்ணவள்ளி ஒத்திவைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai