Enable Javscript for better performance
இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரியலூரில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கநாதன் மகன் இளவரசன் (25). தொழிலாளியான இவர் கடந்த 17-3-2011 அன்று சுத்தமல்லி- சுந்தரேசபுரம் பிரதான சாலையில் நடந்து சென்றபோது அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார்.

    இதையடுத்து இறந்தவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமார்சரவணன், அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 6 லட்சத்து 71 ஆயிரம் இழப்பீடு வழங்க கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.

    ஆனால் இழப்பீடு வழங்காததால், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் முந்தைய இழப்பீட்டுத் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.8 லட்சத்து 39 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் எனவும் அதற்கு ஈடாக பேருந்தை ஜப்தி செய்யுமாறும் நீதிபதி குமார்சரவணன் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் அரியலூர் பேருந்து நிலையம் சென்று அங்கு தஞ்சாவூருக்கு செல்ல நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai