Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே தீக்குளித்த பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே தீக்குளித்து காயமடைந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடுகர்பாளையம் வடக்குதெருவைச் சேர்ந்த சங்கர் மனைவி அம்பிகா (33). இவரது கணவர் சங்கர் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்கிறார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தனது தாயாரின் இறப்புக்காக ஊருக்கு வந்த சங்கரை மீண்டும் சிங்கப்பூருக்கு செல்லக்கூடாது என அம்பிகா கூறினாராம்.

    இதனால் ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு அம்பிகா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் காயமடைந்த அவர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திங்கள்கிழமை காலை உயிரிழந்தார். புகாரின் பேரில் ஆண்டிமடம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai