Enable Javscript for better performance
புதுவாழ்வுத் திட்டத்தில் கடனுதவி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி ஊராட்சியில் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 30 பேருக்கு கடன் வழங்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், சுத்தமல்லி ஊராட்சியில் புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவடைந்தோருக்கும் தனிநபர் கடனுதவி வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

    ஊராட்சித் தலைவர் கண்மணி சம்பத் தலைமை வகித்தார். பாரத வங்கி மேலாளர் வெங்கடரமணி 30 மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்தோர்களுக்கு ரூ.2.45 லட்சத்தில் கடன் உதவிகளையும், 3 பேருக்கு ஓட்டுநர் உரிமத்தையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கச் செயலர் பாண்டியன், புதுவாழ்வுத் திட்ட உதவி மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai