Enable Javscript for better performance
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 24th June 2014 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் கும்பகோணம் பல்நோக்கு சமூக சேவை சங்கம், ஜயங்கொண்டம் மறைவட்ட கூட்டமைப்பு குழு இணைந்து நடத்திய போதை ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு

    விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு ஜயங்கொண்டம் வட்டார முதன்மைக் குரு அருட்திரு ஜி. கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.

    ஜயங்கொண்டம் மறைவட்ட கோல்பிங் கூட்டமைப்புத் தலைவர் எஸ். அற்புதசாமி, செயலர் ஐ. ரோசாலி, செயற்குழு உறுப்பினர் ஐ. ரபேல்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அருட்திரு எஸ். அல்போன்ஸ், பி. ராபர்ட், ப. தமிழரசன் ஆகியோர் பேசினர். ஜயங்கொண்டம் காந்திபூங்காவில் இருந்து பேரணி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முடிந்தது.

    கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ். சூசைமேரி வரவேற்றார்.

    கும்பகோணம் கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ. ஜெயராஜ் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai