மரத்தில் பேருந்து மோதி ஓட்டுநர் சாவு
By அரியலூர் | Published on : 24th June 2014 02:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் அருகே அரசுப் பேருந்து மரத்தில் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
அரியலூரில் இருந்து முட்டுவாஞ்சேரி நோக்கி ஒரு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தது. பேருந்தை உல்லியக்குடியைச் சேர்ந்த முருகேசன் (36) ஓட்டினார். கீழநத்தத்துக்கும், குணமங்கலத்துக்கும் இடையே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பனை மரத்தில் மோதியது. இதில் ஓட்டுநர் பலத்தக் காயமடைந்தார், பயணிகள் யாரும் காயமடையவில்லை. விக்கிரமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்கள்.