Enable Javscript for better performance
லாரி மோதி முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் நடந்து சென்ற முதியவர் லாரி மோதி உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்தவர் வ. பத்ராசலம் (65). இவர் திங்கள்கிழமை காலை செங்குந்தபுரம் அரசுப் பள்ளிக்கு அருகிலுள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்று விட்டு ஜயங்கொண்டம் செந்துறை சாலையில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஜயங்கொண்டம் அருகேயுள்ள வீரசோழபுரம் மெயின்ரோட்டை சேர்ந்த துரைக்கண்ணு மகன் கலியமூர்த்தி (36) பின்னோக்கி ஓட்டிவந்த லாரி மோதி உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மகன் ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai