Enable Javscript for better performance
அதிமுக தெருமுனை பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே அதிமுக தெருமுனைப் பிரசாரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    தமிழக அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கியும், மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அரியலூர் அருகே உள்ள வி. கைகாட்டி அருகே உள்ள சுண்டக்குடி கிராமத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு அரியலூர் ஒன்றிய அதிமுக செயலர் செல்வராசு தலைமை வகித்தார்.

    தலைமைக் கழகப் பேச்சாளர் தில்லைசெல்வம், சந்திரகாசி எம்.பி. ஆகியோர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினர். மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் அன்பழகன், அரியலூர் ஒன்றியக் குழுத் தலைவர் கவிதா சிவப்பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai