Enable Javscript for better performance
கோயில்கள், வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு அவசியம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    கோயில்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அவசியம் அமைக்க வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின்  உத்தரவுப்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளுக்கான விழிப்புணர்வு பிரசார வாகனத்தை ஆட்சியர் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்து பேசியது:

    அரியலூர் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து அலுவலகங்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் கட்டமைப்புகளை  அமைக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வரும் 30-ம் தேதி வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்களில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் மூலம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் (பொ) அறிவழகன், உதவி நிர்வாகப் பொறியாளர் அண்ணாதுரை, மற்றும் உதவி பொறியாளர் உதவி நீர்நில வல்லுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai