Enable Javscript for better performance
மணல் அள்ள அனுமதி வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - Dinamani

சுடச்சுட

    

    மாட்டு வண்டி மூலம் மணல் அனுமதி வழங்கக் கோரி அரியலூரில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நாகரத்தினம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் செல்லத்துரை கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    இதில், முதியோர் உதவித்தொகையை  மாதந்தோறும் தாமதமின்றி வழங்க வேண்டும், முதியோர் உதவித்தொகைக்கு நிதி ஒதுக்க வேண்டும், அஸ்தினாபுரம் ஊராட்சியில் படையாட்சி ஏரியை 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்ததாகக் கூறி முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விக்கிரமங்கலம் - உல்லியக்குடி சாக்கடையை சீரமைக்க வேண்டும், கரும்பு விவசாயிகளுக்கு அரசு அனுமதித்த தொகையை வழங்காத தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai