Enable Javscript for better performance
ரோலர் ஸ்கேட்டிங்: அரியலூர் மாணவருக்கு தங்கப் பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் அரியலூர் மாணவர் தங்கப் பதக்கம் வென்றார்.

    மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் விவேகானந்தா அகாதெமியில், ஜூன் 20-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் பல்வேறு வயது பிரிவைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இதில் அரியலூர் ராம்கோ வித்யா மந்திர் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர் ஜி.எஸ். அர்ஜுன் 8 முதல் 10 வயது பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று,  தங்கப் பதக்கம் வென்றார்.

    முதல் பரிசு பெற்ற மாணவர் அர்ஜுனுக்கு ரோலர் ஸ்கேட்டிங் சங்க மாநிலத் தலைவர் கஸ்தூரி ராஜா பரிசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலர் சொக்கலிங்கம், அரியலூர் மாவட்டச் செயலர் தங்கதுரை, ஆகியோர் அர்ஜுனை வாழ்த்தினர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai