Enable Javscript for better performance
அரியலூர் சிமென்ட் நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் சிமென்ட் நகர லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

    By அரியலூர்,  |   Published on : 26th June 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் சிமென்ட் நகர லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அரியலூர் சார் ஆட்சியர் சந்திரசேகர்சகாமூரி, செந்துறை மனவளர்ச்சி குன்றிய உண்டு, உறைவிடப் பள்ளி மாணவ, மாணவிகள் 50 பேருக்கு பாய், தலையணை, போர்வைகளையும், பூப்பந்துப் போட்டியில் கால் இறுதிச் சுற்று வரை முன்னேறிய கிராமப்பகுதி மாணவர்கள் 24 பேருக்கு விளையாட்டு சீருடைகளையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியது:

    அரியலூர் நகரத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு லயன்ஸ், ரோட்டரி போன்ற சமூகத் தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கி வருகின்றன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல, ஏழை, எளிய மக்களுக்கு மேலும் பல உதவிகளைச் செய்ய வேண்டும். கிராமப்புற மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்தி கல்வியில் சாதனை புரிவதோடு, விளையாட்டிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    நிகழ்ச்சியில், அரியலூர் சிமென்ட் நகர லயன்ஸ் சங்கத்தின் 2014-15 ஆம் ஆண்டின் தலைவராக ஆர். மரியராஜ

    மாணிக்கம், செயலராக சி. பிரபாகரன், இணைச் செயலராக ஏ. சுந்தரராமன், பொருளாளராக கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    லயன்ஸ் சங்க மாவட்ட அவைத் தலைவர் எஸ். நாகராஜ் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல நிர்வாகிகள் ரவீந்திரன், எஸ். ராசிகுமார், அரியலூர் வர்த்தகர் சங்கத் தலைவர் கே. ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai