Enable Javscript for better performance
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு: 3 பேர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேடு: 3 பேர் பணியிடை நீக்கம்

    By அரியலூர்  |   Published on : 26th June 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட 3 பேரை அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

    ஆண்டிமடம் ஒன்றியம், நாகம்பந்தல் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நிதி கையாடல் நடைபெற்றதாக வந்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட உடனடி நடவடிக்கையின் கீழ், நாகம்பந்தல் ஊராட்சித் தலைவர் கே. கனகசபை, ஊராட்சி துணைத் தலைவர் ஆர். தர்மராஜ் ஆகியோர் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆண்டிமடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்) சி. அருள்சாமி, ஆண்டிமடம் ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் எஸ். சரோஜினிதேவி, நாகம்பந்தல் ஊராட்சி செயலர் டி. பாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்தும், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai