Enable Javscript for better performance
\\\"சுற்றுச்சூழலை காக்க நபருக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சுற்றுச்சூழலை காக்க நபருக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும்'

    By அரியலூர்,  |   Published on : 26th June 2014 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுற்றுச்சூழலை காக்க நபருக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்றார் அரியலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர். கண்ணன்.

    உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அரியலூர் இந்தியா சிமென்ட்ஸ் தளவாய் ஆலையில் அண்மையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின விழாவில் அவர் மேலும் பேசியது:

    இயற்கை வளங்கள் அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மரம் வளர்ப்பின் அவசியத்தை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் விளக்கிக் கூற வேண்டும். நாட்டில் 33% காடுகள் இருக்க வேண்டும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் காடுகள்  தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் மழைப் பொழிவு குறைந்து உணவு உற்பத்தி பாதிக்கப்படும். மேலும், மரங்கள் வளர்ப்பதால் காற்றில் உள்ள மாசு குறையும். வெப்பம் கிரகிக்கப்பட்டு மண்ணில் குளுமை நிலவும். எனவே, மரம் வளர்ப்பு என்பது இன்றைய அவசர, அவசிய தேவையாகும். வீட்டுக்கு ஒரு மரம் என்பதல்ல, நபருக்கு ஒரு மரம் என்ற வகையில் மரங்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். அவ்வாறு வளர்க்கப்பட்டால்தான் சுற்றுச்சூழல் காக்கப்படும், வருங்கால சந்ததியும் காப்பாற்றப்படும் என்றார் அவர்.

    விழாவில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அரியலூர் மாவட்ட உதவிப் பொறியாளர் நவாப்ஜான், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (தயாரிப்பு) டி. பாலசுப்பிரமணியன், உதவி துணைத் தலைவர்கள் என். மனோகரன் (பொறியியல்), யதேந்திரஷா (உற்பத்தி) ஆகியோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தனிநபரின் பங்கு குறித்து பேசினர்.

    சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைப் பொது மேலாளர் (தர உற்பத்தி) எல். ராமராஜ் வரவேற்றார். உதவி மேலாளர் (சுற்றுச்சூழல்) மருத்துவர் ஆர். வேல்முருகன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் டி.எஸ்.என். மெட்ரிக் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், மகளிர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai