Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல் பணி: மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல் பணி: மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

    By அரியலூர்,  |   Published on : 26th June 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடவடிக்கைகளை மடிக்கணினி, வெப்கேமரா மூலம் பதிவு செய்த மாணவ, மாணவிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் பாராட்டுச் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கினார்.

    கடந்த ஏப். 24-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அரியலூர், ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் 200 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவை, மடிக்கணினி மற்றும் வெப்கேமரா மூலம் பதிவு செய்யும் பணியில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 200 பேர் ஈடுபட்டனர். அவர்களை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியர் சரவணவேல்ராஜ் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபா கமால்பாட்ஷா, துணை ஆட்சியர் (பயிற்சி) ஜெயச்சந்திரன், தேர்தல் வட்டாட்சியர் ராமன், மாவட்ட தகவலியல் அலுவலர்கள் ஜான்பிரிட்டோ, பிச்சையா, அரசு கலைக் கல்லூரி கணினி துறைத் தலைவர் சகாயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai