Enable Javscript for better performance
அரியலூரில் இன்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் இன்று அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

    By அரியலூர்,  |   Published on : 27th June 2014 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு ஊழியர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது. இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவகங்களில் பணிபுரியும் மாநில அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளலாம். காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையில் பணிபுரிபுரியும் காவலர்கள் தவிர பிற அலுவலக உதவியாளர்கள் பங்கேற்கலாம். பணியில் புதிதாக சேர்ந்து 6 மாத காலத்திற்குட்பட்டவர்கள் கலந்துகொள்ள இயலாது. ஒப்பந்த பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் நிர்ணயத்திற்குட்பட்ட தினக்கூலி பணியாளர்கள், மத்திய அரசு அலுவலர்கள், பாதுத் துறை நிறுவன ஊழியர்கள், மின்துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை, கார்ப்பரேசன், கூட்டுறவுத் துறை ஊழியர்கள் கலந்து கொள்ள இயலாது. விளையாட்டுத் துறை மற்றும் கல்வித் துறையில் பணிபுரியும் உடற்கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் தவிர பிற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொள்ளலாம்.

    மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பயிற்றுநர்கள் விளையாட்டு கற்பிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொள்ள இயலாது. இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அந்தந்த துறை மூலம் வழங்க அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர். போட்டிகளில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி அந்தந்த அலுவலகத்தின் பொறுப்பாகும். போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு போட்டியின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வரவேண்டும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai