Enable Javscript for better performance
தாட்கோ திட்டத்தில் கடன் வழங்குவதில் அரியலூர் மாவட்டம் முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    தாட்கோ திட்டத்தில் கடன் வழங்குவதில் அரியலூர் மாவட்டம் முதலிடம்

    By அரியலூர்,  |   Published on : 27th June 2014 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாட்கோ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கடனுதவி வழங்குவதில் அரியலூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் வகிக்கிறது என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்து 76 ஆயிரத்து 846 மதிப்பிலான மகேந்திரா வேனை அரியலூர் மாவட்டம், ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமிக்கு வியாழக்கிழமை வழங்கிய அவர் மேலும் பேசியது:

    தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 30 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வங்கிகள் மூலம் விரைந்து வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடன்கள் மற்றும் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதில் அரியலூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் வகிக்கிறது என்றார் அவர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்பவிநாயகமூர்த்தி, தாட்கோ மாவட்ட மேலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai