Enable Javscript for better performance
வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு கிராமிய தொழில்நுட்பப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு கிராமிய தொழில்நுட்பப் பயிற்சி

    By அரியலூர்,  |   Published on : 27th June 2014 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் ரோவர் வேளாண்மைக் கல்லூரி மாணவர்களுக்கு அரியலூர் வட்டாரத்தில் 10 நாட்கள் கிராமிய தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பெரம்பலூர் ரோவர் வேளாண்மைக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 12 பேர் நவீன விவசாயம் குறித்து அறிந்து கொள்வதற்காக அரியலூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் கடந்த 17-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 10 நாட்கள் கிராமிய தொழில்நுட்பப் பயிற்சி பெற்றனர். இதன் ஒரு பகுதியாக அரியலூர் அருகே உள்ள பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள முன்னோடி விவசாயி பாண்டித்துரையின் கரும்பு வயலுக்குச் சென்று செம்மை கரும்பு சாகுபடி, பசுமை குடிலில் செம்மை கரும்பு நாற்றங்கால் வளர்க்கும் தொழில்நுட்பம் குறித்தும், முருங்கை சாகுபடி மற்றும் சொட்டுநீர்ப் பாசனத் தொழில் நுட்பம் ஆகியவை குறித்து கேட்டறிந்தனர்.

    மேலும் நாகமங்கலம் பகுதியில் உள்ள முன்னோடி விவசாயி செல்லப்பிள்ளையின் வயலுக்குச் சென்று நிலக்கடலை சாகுபடியில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் குறித்து நேரடி விளக்கம் பெற்றனர்.

    இதில் வேளாண் உதவி இயக்குநர் சு. மல்லிகா, வேளாண் அலுவலர் டி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai