Enable Javscript for better performance
அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரசவ வார்டு, அவசர சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் பிரிவு மற்றும் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கட்டடப் பணிகளை பார்வையிட்ட அவர், பல பகுதிகளில் மின் விளக்குகள் எரியாமல் இருந்ததைப் பார்த்து அவற்றை சரிசெய்ய உத்தரவிட்டார்.

    மருத்துவமனையைச் சுற்றி காலியாக உள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும், அங்கு பூங்கா அமைக்கவும் திட்டம் தயாரித்துத் தருமாறு மருத்துவர்களிடம் தெரிவித்தார். பின்னர், மருத்துவமனைக்கு வந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆட்சியருடன் சட்டப்பேரவை உறுப்பினர் துரை. மணிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரமேஷ் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai