Enable Javscript for better performance
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ரயில் கட்டண உயர்வைக் கண்டித்து, அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசு பயணிகள் ரயில் கட்டணத்தை 14 சதவீதம் உயர்த்தியது. இந்தக் கட்டண உயர்வு ஜூன் 25 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்தக் கட்டண உயர்வைக் கண்டித்து அரியலூர் மாவட்டக் காங்கிரஸ் கட்சி சார்பில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.எம். குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், வழக்குரைஞர் பழனிச்சாமி, செந்துறை வட்டாரத் தலைவர் கொளஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே நிதி நிலை அறிக்கைக்கு முன்பே ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டதையும், சமையல் எரிவாயு விலையை உயர்த்த உத்தேசித்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் முன்னாள் எம்எல்ஏ நல்லமுத்து, அரியலூர் மாவட்ட ஐஎன்டியுசி தலைவர் தமிழ்மணி, தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமார், திருமானூர் சுந்தரசோழன், வட்டாரத் தலைவர்கள் கதிரவன், வீர. ரவி, தா. பழூர் அன்பழகன், மாணிக்கவேல், சங்கர், கீழப்பழூவூர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரத் தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai