Enable Javscript for better performance
பணிக்கு வராத விடுதிக் காவலர் பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் பணிக்கு வராத அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வியாழக்கிழமை (ஜூன் 26) ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு காவலர், ஏவலராகப் பணிபுரிந்து வரும் கே. மல்லிகா பணியில் இல்லை, என்பதைக் கண்டறிந்தார். இதைத் தொடர்ந்து, மல்லிகாவை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து, ஆட்சியர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். மேலும், இவ்விடுதியில் காப்பாளராகப் பணிபுரிந்து வரும் ஞானம் என்பவரை கல்லங்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்த விடுதி தேர்வுக் குழு உறுப்பினர் வெங்கடாசலம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி தொந்தரவு செய்து வந்தாராம்.

    இதுதொடர்பாக, ஞானம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் வெங்கடாசலம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து, வெங்கடாசலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai