Enable Javscript for better performance
மணல் லாரி கவிழ்ந்து விபத்து: இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    இரும்புலிக்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை மணல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

    அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி அருகேயுள்ள பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் மகன் சத்யராஜ் (26). இவர் தனது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் (22), அருள் (24) ஆகியோருடன் ஒரு மினி லாரியில் வங்காரம் ஓடையில் மணல் ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை தங்களது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். மினி லாரியை தர்மராஜ் (21) ஓட்டி வந்தார்.

    இந்த லாரி கீழமாளிகை ராசப்பாளையம் பிரிவு சாலையில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் ஏற்றப்பட்டிருந்த மணல் மீது அமர்ந்திருந்த சத்யராஜ் உள்ளிட்ட 3 பேரும் மணலுக்கு அடியில் சிக்கிக் கொண்டனர். இதில் மூச்சுத் திணறி சத்யராஜ் உயிரிழந்தார். மேலும், சக்திவேல், அருள் இருவரும் காயமடைந்தனர்.

    இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai