Enable Javscript for better performance
மீன்சுருட்டி அருகே ரூ. 6 லட்சம் மரங்கள் தீக்கிரை: 3 பெண்கள் கைது- Dinamani

சுடச்சுட

    

    மீன்சுருட்டி அருகே ரூ. 6 லட்சம் மரங்கள் தீக்கிரை: 3 பெண்கள் கைது

    By அரியலூர்  |   Published on : 28th June 2014 12:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வியாழக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பிலான முந்திரி மற்றும் தைல மரங்கள் சேதமடைந்தது தொடர்பாக, 3 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

    மீன்சுருட்டி அருகேயுள்ள குமிழியன்குழி கிராமத்தைச் சேர்ந்த அகஸ்டின் மனைவி அடைக்கலம் (61), ஆரோக்கியசாமி மனைவி சந்தோசமேரி (75), பீட்டர் மனைவி ஜோஸ்மேரி (75). இவர்கள் 3 பேரும் வியாழக்கிழமை பிற்பகல் அடைக்கலத்துக்குச் சொந்தமான தைலமரக் காட்டில் தைலமர சருகுகளை தீயில் எரித்தனர். அந்தத் தீ காற்றின் வேகத்தால் அருகில் இருந்த காட்டுராஜா (55) என்பவருக்குச் சொந்தமான தைலமரக்காடு மற்றும் முந்திரிக் காட்டிலும் பரவியது.

    இதில் 20 ஏக்கர் பரப்பளவில் இருந்த ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான தைலமரக்கன்றுகள் மற்றும் முந்திரி மரங்கள் தீயில் கருகின.

    இந்த தீ விபத்து குறித்து காட்டுராஜா அளித்த புகாரின்பேரில், மீன்சுருட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் வழக்குப் பதிந்து, 3 பெண்களையும் கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai