Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் 4 பள்ளிகளை மூட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படைக் கட்டமைப்பு வசதி இல்லாததால் அரியலூர் மாவட்டத்தில் 4 மழலையர் பள்ளிகளை மூட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. மதிவாணன் சனிக்கிழமை உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    இந்த மாவட்டத்தில் இயங்கிவரும் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அடிப்படை வசதிகளைச் செய்யாத செந்துறை தாலுகா, குவாகத்தில் ஒரு பள்ளி, உடையார்பாளையம் தாலுகாவில் உட்கோட்டை கிராமத்தில் ஒரு பள்ளி, இருகையூரில் ஒரு பள்ளி, தா. பழூரில் ஒரு பள்ளி என 4 மழலையர் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 9 மழலையர் பள்ளிகள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளன. அந்தப் பள்ளிகளை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையிலான குழு சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 28, 29) ஆய்வு செய்த பிறகு அவற்றுக்கு அங்கீகாரம் அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai