Enable Javscript for better performance
சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் காவல் துறை சார்பில் சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    பேரணிக்கு ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ந. அன்பழகன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். பேரணியில் ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியார் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாடர்ன் மெட்ரிக் பள்ளி மற்றும் நேஷனல் கல்லூரி, அன்னை தெரசா கல்லூரி, கே.கே.சி கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.

    ஜயங்கொண்டம் காந்தி பூங்காவில் பேரணி தொடங்கி கடைவீதி, நான்குசாலை, அண்ணாசிலை மற்றும் பேருந்து நிலையச் சாலை வழியாக சென்று ஜயங்கொண்டம் திருமணமண்டபம் முன் முடிந்தது.

    தொடர்ந்து 4 பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

    இதில் ஜயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி முதல் இடத்தையும், மாடர்ன் மெட்ரிக் பள்ளி மாணவிகள் 2-ம் இடத்தையும் பெற்றனர். தொடர்ந்து சாலை விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் காண்பிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் ஜயங்கொண்டம் சோழன்சிட்டி அரிமா சங்கத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் ந. கணேசன், மாடர்ன் கல்லூரி முதல்வர் ஜான்பிரிட்டோ, போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க மாவட்டத் தலைவர் சந்திரமோகன், செயலர் வெங்கட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    காவல் உதவி ஆய்வாளர் நடேசன் வரவேற்றார். உதவி ஆய்வாளர் ரபீக்ஹுசேன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai