Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் லாரிகள் மோதல்: 7 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் லாரிகள் மோதல்: 7 பேர் காயம்

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 29th June 2014 05:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நான்கு சாலையில் லாரிகள் மோதிக்கொண்டதில் 7 பேர் காயமடைந்தனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஜயங்கொண்டத்துக்கு வந்து கொண்டிருந்தது.

    கரூரில் இருந்து காட்டுமன்னார்குடிக்கு கருங்கள் ஜல்லி ஏற்றிக்கொண்டு மற்றொரு லாரி சென்றது.

    ஜயங்கொண்டம் நான்கு சாலையில் இரண்டு லாரிகளும் குறுக்கே மோதிக்கொண்டன.

    இதில் கருங்கல் லாரியின் டயர் வெடித்து மின்கம்பத்தில் மோதி நின்றது.

    செங்கல் லாரியில் வந்த பெண் தொழிலாளர்களான திக்கியம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி பாக்கியம் (55), கிருஷ்ணன் மனைவி சுமதி (35), ராஜா மனைவி அமராவதி (35), வெங்கடாசலம் மனைவி லட்சுமி (35), சங்கர மனைவி அன்பரசி (27), மாணிக்கம் மனைவி மாது (50), மற்றும் ஓட்டுநர் ஆத்தூர் வடக்குபுதூரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன் (38) ஆகியோர் காயமடைந்தனர்.

    ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களில் பாக்கியம், மாது ஆகியோர் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai