Enable Javscript for better performance
பிற்படுத்தப்பட்டோர் உயர்கல்விஉதவித் தொகை பெற அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிற்படுத்தப்பட்டோர் உயர்கல்விஉதவித் தொகை பெற அழைப்பு

    By அரியலூர்,  |   Published on : 30th June 2014 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவ, மாணவிகள் உயர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

    பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு மிகாமலும், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள அனைத்து ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு கற்பிப்பு கட்டணம் உள்பட கட்டாயத் திருப்பி செலுத்தப்படாத கட்டணங்கள் அரசால் நேரடியாக கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும் இக்கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு பராமரிப்புப் படி தனியே மாணவர்களின் வங்கிக் கணக்கில் அரசால் மின்னணுத் தீர்வை முறை மூலம் செலுத்தப்படுகிறது.

    சுயநிதிக் கல்லூரிகளில் (பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், ஆசிரியர்கள் கல்வி பயிற்சி படிப்புகள்) பயிலும் தகுதியுள்ள அனைத்து ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களுக்கு சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டாய திருப்பிச் செலுத்தப்படாத கட்டணங்கள் மட்டும் அரசால் கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது.

    மேலும் இக்கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு பரமாரிப்புப் படி தனியே மாணவர்களின் வங்கி கணக்கில் அரசால் செலுத்தப்படுகிறது. அதே போன்று சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கட்டணம் வழங்கப்பட உள்ளது.

    தொடர்புடைய அனைத்து கல்லூரிகளும் மாணவர்களிடமிருந்து தேவையான விபரங்களைப் பெற்று இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து மாணவர்கள் கல்லூரிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai