மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.90 லட்சம் கடன்
By அரியலூர் | Published on : 30th June 2014 05:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூர் மாவட்ட புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.90 லட்சம் கடன் அண்மையில் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட புதுவாழ்வுத் திட்டம் தா. பழூர் ஒன்றியம், சுத்தமல்லி களப்பகுதிக்குள்பட்ட உல்லியக்குடி கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் மூலம் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. உல்லியக்குடி ஊராட்சித் தலைவர் ஆர். முனியமுத்து தலைமை வகித்து, 72 பயனாளிகளுக்கு ரூ. 2.30 லட்சம் மற்றும் 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதி ரூ. 60 ஆயிரம் என ரூ. 2.90 லட்சத்துக்கான கடனுதவியை வழங்கினார். மாவட்ட உதவித் திட்ட மேலாளர் என். சுரேஷ், ஊராட்சித் துணைத் தலைவர் ஏ. குணசேகரன், ஊராட்சி செயலர் சாமிதுரை, புதுவாழ்வுத் திட்ட வாழ்வாதார ஒருங்கிணைப்பாளர் கே. வாசுதேவன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜே. கலையரசி நன்றி கூறினார்.