Enable Javscript for better performance
பறக்கும் படை சோதனையில் வெடிபொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே கீழப்பழூவூரில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினரால் புதன்கிழமை வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் மெய்யப்பன் புதன்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது, புதிய பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் இரண்டு மூட்டைகளுடன் இருவர் வந்து கொண்டிருந்தனர்.

    அவர்களை நிறுத்தி சோதனை செய்த போது, மூட்டைகளில் சணலால் சுற்றப்பட்ட பெரிய வெடிகள், ராக்கெட் மற்றும் வெடிக்கும் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில், அவர்கள் கீழப்பழூவூரைச் சேர்ந்த தர்மராஜ், ராஜசேகர் என்பதும், திருமானூரில் வெடி தயாரிக்கும் இடத்திலிருந்து அரியலூர் மாவட்டம், பாலாம்பாடிக்கு அவற்றை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

    அந்த வெடி பொருட்களுக்கு ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரியலூர் வட்டாட்சியர் முருகனிடம் ஒப்படைத்தனர்.

    மேலும், இதுகுறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai