சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் இன்று சிறுபாசன கணக்கெடுப்புப் பணி

    By DN  |   Published on : 01st November 2014 12:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் சிறுபாசன கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (நவ. 1) தொடங்குகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு:

    தமிழ்நாட்டில் 5-வது சிறுபாசன கணக்கெடுப்புப் பணி 2013-14 ஆம் ஆண்டினை (1.7.2013 முதல் 30.6.2014 வரை) அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட உள்ளது. அரியலூர்

    மாவட்டத்தில் உள்ள அனைத்து  வருவாய்க் கிராமங்களிலும் இந்த களப்பணியை  கிராம நிர்வாக அலுவலர் மேற்கொள்வார்.

    விவசாயம் சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்தும் பொருட்டு கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பை நல்குமாறு அந்தச் செய்திக்

    குறிப்பில் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai