சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே போலீஸாரை தாக்கிய மூவர் மீது வழக்கு

    By DN  |   Published on : 01st November 2014 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே போலீஸாரை தாக்கிய மூவர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் காவல்  நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் சிங்காரம் (48). இவர் வெள்ளிக்கிழமை விருத்தாசலம் நீதிமன்றம்

    அளித்த பிடி ஆணையின்படி அரியலூர் மாவட்டம்,  அய்யப்பநாயக்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் ரவிச்சந்திரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில்

    ஒப்படைப்பதற்காக காவலர்  செல்வக்குமாருடன் அய்யப்பநாயக்கன்பேட்டைக்கு சென்றார்.

    அப்போது ரவிச்சந்திரன், அவரது மனைவி  ஜெயகலா, தந்தை சாமிதுரை ஆகியோர்  போலீஸாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த சிறப்பு காவல்

    உதவி ஆய்வாளர் சிங்காரவேல், காவலர் செல்வக்குமார் இருவரும் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மீன்சுருட்டி

    போலீஸார் வழக்குப் பதிந்து தப்பியோடிய மூவரையும் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai