சுடச்சுட

  

  கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து கோத்தாரி சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வாரணவாசி கி. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

  அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் கடந்த ஆண்டு வெட்டி அனுப்பிய கரும்புக்கு தமிழக அரசு அறிவித்த விலையை கோத்தாரி சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்காமல் கடந்த 10 மாதங்களாக ரூ. 10 கோடி பாக்கி வைத்துள்ளதை சுட்டிக்காட்டி எங்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகை கிடைக்காத வரை கோத்தாரி ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், எங்களது கரும்பை வேறு ஆலைகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோத்தாரி ஆலைக்கு இனி எந்தக் காலத்திலும் வெளி மாவட்டத்தில் இருந்து கரும்பு எடுத்து வர அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை வைத்தோம்.

  மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் தரப்பு கோரிக்கையை ஏற்று ஆலை நிர்வாகத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வெளி மாவட்டத்தில் இருந்து கரும்பு எடுத்து வர அனுமதிக்க முடியாது என்றும், கோத்தாரி ஆலைக்கு கரும்பு பதிவு செய்துள்ள

  விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் கரும்பினை வேறு ஆலைகளுக்கு அனுப்புவதற்கு சர்க்கரை துறை ஆணையரின் அனுமதியை பெற்று அனுப்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகவும் உறுதி அளித்தார்.

  மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு கோத்தாரி சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai