சுடச்சுட

  

  செந்துறை அருகே ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை

  By அரியலூர்  |   Published on : 02nd November 2014 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செந்துறை அருகே ரயில் முன் பாய்ந்து இளம்பெண் சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

  அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நின்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், கூலித் தொழிலாளி. இவரது மகள் நிவேதா (18) பிளஸ் 2 வரை படித்துள்ளார்.

  இந்நிலையில் நிவேதா சனிக்கிழமை மாலை தனது வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே நின்று கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரத்திலிருந்து திருச்சிக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. நிவேதா நிற்பதை பார்த்த என்ஜின் ஓட்டுநர் சைரன் மூலம் எச்சரித்துள்ளார். ஆனால் நிவேதா அங்கேயே நின்றதால் என்ஜின் மோதி அவர் உயிரிழந்தார். விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர் விசாரிக்கிறார்கள்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai