சுடச்சுட

  

  நவீன உரக்கிடங்கு அமைவதை எதிர்த்து மறியல்

  By ஜயங்கொண்டம்  |   Published on : 02nd November 2014 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே நவீன உரக்கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சிக்காக திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நவீன இயந்திரங்களுடன் கலவை உரக்கிடங்கு அமைக்க ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் புதுகுடி கிராமத்தில் உள்ள கல்குவாரியில் இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணி சனிக்கிழமை தொடங்கப்படுவதாக இருந்தது.

  இதையறிந்த கிராம மக்கள் 12 ஏக்கரில் உள்ள இந்த கல்குவாரி பெரிய குளமாக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக புதுகுடி வடக்கு, தெற்கு, செங்குந்தபுரம் ஆகிய பகுதி மக்கள் குளிக்கவும் மற்ற தேவைகளுக்காகவும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

  மேலும் கல்குவாரி குளத்தைச் சுற்றி குடியிருப்புப் பகுதியாக உள்ளதால் இங்கு கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்ப்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

  எனவே இந்த இடத்தில் உரக்கிடங்கு அமைக்கக் கூடாது எனக்கூறி ஜயங்கொண்டம் செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

  தகவலறிந்த கோட்டாட்சியர் ஜி. கருணாகரன், காவல் துணைக் கண்காணிப்பாளர் வின்சென்ட்ஜெயராஜ், வட்டாட்சியர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர்கள் குணசேகரன், கவிதா உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஜயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேசி முடிவெடுக்கலாம் எனக் கூறியதையடுத்து மறியலைக் கைவிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai