சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு கட்சியின் சார்பில் ரூ. 3 லட்சம் குடும்ப நல நிதியை அமைச்சர் வைத்திலிங்கம் ஞாயிற்றக்கிழமை வழங்கினார்.

    ஜெயலலிதா கைது செய்யப்பட்ட அதிர்ச்சியில் அரியலூர் மாவட்டம், குலமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் உயிரிழந்தார்.

    அவரது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியாக ரூ. 3 லட்சத்தை அமைச்சர் வைத்திலிங்கம் நாகராஜின் மனைவி சுமதியிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டச் செயலர் தாமரை. ராஜேந்திரன், மா. சந்திரகாசி எம்பி, துரை. மணிவேல் எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஆ. இளவரசன், முன்னாள் எம்எல்ஏக்கள் இளவழகன்,பாளை. அமரமூர்த்தி, திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் சீனிவாசன் மற்றும் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai