சுடச்சுட

  

  எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

  By அரியலூர்,  |   Published on : 03rd November 2014 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள தேர்வுக்கு எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

  இதுகுறித்து அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  மார்ச்,ஏப்ரல் 2015-ல் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் நவ.7 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை இணைய வழியில் பதிய வேண்டும்.

  அரியலூர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தேர்வர்களில் மார்ச் 2015 எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வெழுத, செயல்முறை தேர்வெழுத ஆண்கள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெண்கள் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பதிவு செய்ய வேண்டும்.

  உடையார்பாளையம் கல்வி மாவட்ட தனித்தேர்வர்களில் ஆண்கள் உடையார்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பெண்கள் உடையார்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பதிய வேண்டும்.

  ஜயங்கொண்டம் ஆண்கள் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், பெண்கள் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பதிய வேண்டும்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai