சுடச்சுட

  

  கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் சார்பில் உதவி

  By அரியலூர்  |   Published on : 03rd November 2014 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் சார்பில் ரூ. 45 லட்சத்து 83 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை வழங்கினார்.

  ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1772 உறுப்பினர்களுக்கு ரூ.43 லட்சத்து 35 ஆயிரத்தில் கல்வி உதவித்தொகை காசோலை, 30 உறுப்பினர்களுக்கு ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தில் திருமண உதவித்தொகை காசோலை, 12 உறுப்பினர்களுக்கு ரூ.72 ஆயிரத்தில் மகப்பேறு உதவித் தொகை காசோலை, 7 உறுப்பினர்களுக்கு ரூ. 3,500 மதிப்பில் கண் கண்ணாடிக்கான உதவித் தொகை,3 உறுப்பினர்களுக்கு ரூ.51 ஆயிரத்தில் இயற்கை மரண உதவித்தொகை காசோலை என மொத்தம் 1824 உறுப்பினர்களுக்கு உதவிகளை வழங்கினார்.

  நிகழ்ச்சியில் சிதம்பரம் மக்களவை உறுப்பினர் மா. சந்திராகாசி, துரை. மணிவேல் எம்எல்ஏ, பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தாமரை. ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலர் முகமதுயூசுப், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai