சுடச்சுட

  

  பதிவுமூப்புப் பட்டியலை சரிபார்க்க இன்று கடைசிநாள்

  By அரியலூர்,  |   Published on : 04th November 2014 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொழிற்கல்வி பயிற்றுநர் காலிப்பணிக்கான பதிவுமூப்புப் பட்டியலை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 4) சரிபார்க்கலாம் என மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 652 தொழிற்கல்வி பயிற்றுநர் (இர்ம்ல்ன்ற்ங்ழ் ஐய்ள்ற்ழ்ன்ஸ்ரீற்ர்ழ்) பணி காலியிடங்களுக்கு மாநில அளவில் பரிந்துரை செய்ய உத்தேச பதிவுமூப்புப் பட்டியல் தயார்செய்யப்பட உள்ளது.

  இந்தப் பணியிடத்துக்கு பி.எட். மற்றும் பி.எஸ்.சி. கணினி அறிவியல் அல்லது பி.எட். மற்றும் பிசிஏ அல்லது பி.எட். மற்றும் பி.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம் அல்லது பி.எட். மற்றும் பி.இ கல்வித் தகுதிகளில் ஒன்றை அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

  இந்த கல்வித் தகுதியுடன் முன்னுரிமை பிரிவில் ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவுகளின் கீழ் பதிவுசெய்துள்ள அனைவரும், மற்ற முன்னுரிமையின் கீழ் உள்ளவர்களில் பிசிஎம் பிரிவில் 19.3.2013 வரை பதிந்துள்ளவர்களும், எஸ்சி, எஸ்சிஏபிசி, எம்பிசி, ஓசி பிரிவினர் 3.9.2012 வரையிலும், பிசிஎம் பிரிவில் 17.8.2009 வரையிலும், எஸ்டி பிரிவில் 3.9.2011 வரையிலும், எஸ்சி, பிசி, எம்பிசி, ஓசி, பிரிவில் 22.8.2008 வரையிலும் பதிவு செய்துள்ளவர்களது பெயர்களுடன் உத்தேச பதிவுமூப்பு பட்டியல் மாநில அளவில் தயாரிக்கப்பட உள்ளது.

  எனவே, அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துள்ள தகுதியானவர்கள், தங்களது பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க அனைத்துக் கல்விச் சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நவ. 4 ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து பதிவுமூப்பை சரிபார்த்துக்கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai