சுடச்சுட

  

  பால் விலை உயர்வு:ஜயங்கொண்டத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்

  By ஜயங்கொண்டம்  |   Published on : 04th November 2014 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பால் விலை, மின் கட்டண உயர்வைக் கண்டித்து, ஜயங்கொண்டம் காந்தி பூங்கா முன் பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் நீலமேகம், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் தனபால், விவசாய அணி பக்தவச்சலம் ஆகியோர் பேசினர்.

  ஆர்ப்பாட்டத்தில், வழக்குரைஞர் ராஜேந்திரன், அசோகன், ஜம்புலிங்கம், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் பாலமுருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் செல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai