சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மனைவியை காரில் கடத்தியதாக கணவர் மீது அவரது மாமனார் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார்.

  ஜயங்கொண்டம் அருகே உள்ள கவரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகள் மஞ்சுளா (24). இவருக்கும், இதே பகுதியில் உள்ள அருளானந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஆரோக்கியராஜுக்கும் (32) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தம்பதிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக மஞ்சுளா தனது இரு பெண் குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிலும், ஆரோக்கியராஜ் மகனுடன் தனது வீட்டிலும் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரோக்கியராஜ், தனது மனைவியை கொலை செய்ய முயன்றதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில், கடந்த அக். 29 ஆம் தேதி மஞ்சுளா அருகே உள்ள முந்திரி தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தாராம். அப்போது, ஆரோக்கியராஜ் தனது நண்பர்கள் மூன்று பேருடன் வந்து அவரை காரில் கடத்திச் சென்றுவிட்டதாக, மஞ்சுளாவின் தந்தை லட்சுமணன் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், காவல் உதவி ஆய்வாளர் அழகிரி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai