சுடச்சுட

    

    அரியலூரில் செவ்வாய்க்கிழமை திமுகவின் ஊழல் குறித்த துண்டுப் பிரசுரங்களை அதிமுகவினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.

    அரியலூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் தாமரை. ராஜேந்திரன் தலைமை வகித்தார். துரை. மணிவேல் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    அரியலூர் பேருந்து நிலையம், மார்க்கெட் தெரு, எம்.பி. கோயில் தெரு, சின்னக்கடைவீதி, திருச்சி சாலை, செந்துறை சாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் அதிமுகவினர் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத் தலைவர் கணேசன், அரியலூர் நகரச் செயலர் ஏஎஸ்எம். கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள், திருமானூர் ஒன்றியக்குழுத் தலைவர் சீனிவாசன் உள்பட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai