சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் நிலவும் யூரியா உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமானூர் ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

  திருமானூர் ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.

  இதில் அதிமுக உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கண்ணதாசன், திமுக உறுப்பினர் எழிலரசி ஆகியோர் பேசும்போது, அரியலூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையால் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

  விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் போதுமான அளவில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், மூட்டை ரூ. 287-க்குப் பதில் ரூ. 450-க்கு விற்கப்படுகிறது. இதை வேளாண்துறை அதிகாரிகள் கண்காணித்து, உரிய விலைக்கு, தட்டுப்பாடின்றி யூரியா விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  தா.பழூர் ஒன்றியம் அம்பலவர்கட்டளை, அரியலூர் ஒன்றியம், சிலுப்பனூர், திருமானூர் ஒன்றியம் காமரசவல்லி, மாத்தூர் வரை உள்ள தார்ச்சாலைகள் குண்டும், குழியுமாக பழுது அடைந்துள்ளன அதை ஒன்றிய நிதியிலிருந்து சீர்செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

  கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், துணைத் தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai