சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா வியாழக்கிழமை (நவ.6) நடைபெறுகிறது.

  ஜயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலாம் ராசேந்திர சோழனின் வெற்றியின் அடையாள சின்னமாக 11-ம் நூற்றாண்டில் பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டது.

  இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி பெüர்ணமியன்று பிரகதீஸ்வரருக்கு கடந்த 29 ஆண்டுகளாக காஞ்சி சங்கர மடம் சார்பில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

  இதில் 100 மூட்டை அரிசி கொண்டு சாதம் சமைத்து லிங்கத்தின் மீது சாத்தப்படும். இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது.

  அன்னாபிஷேகத்தை முனனிட்டு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கணக்க விநாயகருக்கு கணபதி ஹோமமும் தொடர்ந்து 12 மணியளவில் மகா அபிஷேகமும் தீபாராதனையும், அபிஷேகமும் நடைபெற்றன.

  புதன்கிழமை காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை 10 மணி முதல் கோயில் வளாகத்தில் சாதம் வடித்து பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டு மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பலகாரங்களால் அலங்கரிக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai