சுடச்சுட

  

  , நவ. 4: நில மோசடி செய்ததாக ஆசிரியர் உள்பட 5 பேர் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் காவல் நிலையத்தில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த பழனிவேல் மனைவி வனிதா (32) செவ்வாய்க்கிழமை ஒரு புகார் அளித்தார்.

  அதில், சிதம்பரத்தில் உள்ள எங்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆண்டிமடத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் கொளஞ்சி, புவனகிரியைச் சேர்ந்த பாபுலால், சிதம்பரத்தைச் சேர்ந்த மணிமாறன், சேத்தியாத்தோப்பை அடுத்த நற்குணத்தைச் சேர்ந்த புதுராஜா, மற்றும் சக்திவேல் மனைவி வாசுகி ஆகியோர் விற்றுத் தருவதாக கூறினர்.

  இதை நம்பி நானும் எனது கணவர் பழனிவேலும் ஆண்டிமடம் வந்தோம். எனது கணவர் பழனிவேலை மேற்கண்ட நபர்கள் அடித்து உதைத்து வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு மிரட்டிச் சென்றனர்.

  எங்களது நிலத்தை மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

  ஆண்டிமடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி, இதுகுறித்து ஆசிரியர் கொளஞ்சி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai