சுடச்சுட

    

    அரியலூர் அருகே நிலத் தகராறில் பெண்ணைத் தாக்கிய 2 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    அரியலூர் அருகே உள்ள குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமிக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது.

    இந்நிலையில், திங்கள்கிழமை ஜெயபாலின் மனைவி நீலாவதி (47) பிரச்னைக்குரிய நிலத்தின் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது  அங்கு வந்த வேலுசாமி மற்றும் அவரது சகோதரர் சுப்பிரமணியன் ஆகியோர் நீலாவதியை தரக்குறைவாகப் பேசி, தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நீலாவதி அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப் பதிந்து, வேலுசாமி மற்றும் சுப்பிரமணியனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai