சுடச்சுட

  

  அரியலூர் - கடுகூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

  By அரியலூர்  |   Published on : 06th November 2014 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூரிலிருந்து கடுகூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

  அரியலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கக் கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் தலைவர் மு. சமுத்திரம் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில் பெரம்பலூர் - மானாமதுரை சாலையில் வாரணவாசி பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. இதைத் தடுக்க மருதையாற்றில் பாலம் கட்டி சாலையை நேராக சீரமைத்து கனரக வாகனங்களை இயக்க வேண்டும். ஜயங்கொண்டத்தில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும்.

  அரியலூர் முதல் கடுகூர் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தேர்தல் நடத்தி பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில், சங்கத்தின் துணைத் தலைவர் ரா. லட்சுமி, இணைச் செயலாளர் மு. ராமச்சந்திரன், ஏ.பி. ராஜேந்திரன், மு. கணேசன், கு. குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனோகரன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai