சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் சுகுணா தவச்செல்வன் தலைமை வகித்தார். அரியலூர் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அன்பரசி முன்னிலை வகித்தார். ஆண்டிமடம் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் அருணா வரவேற்றார்.

  விழாவில், கேழ்வரகு, கம்பு, தினை, சோளம், குதிரைவாலி, பனிவரகு, சாமை ஆகிய இயற்கை சிறுதானியங்களில் இருந்து களி, ரொட்டி, இட்லி, தோசை, அடை, பொங்கல், பாயாசம், பணியாரம், கிச்சடி, கஞ்சி உள்ளிட்ட 33 விதமான உணவுப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஆண்டிமடம் ஒன்றியத்துக்குள்பட்ட 125 ஊட்டச்சத்து மையப் பொறுப்பாளர்கள் தயார்செய்து பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்ததுடன், சிறுதானியத்தை கொண்டு தயார்செய்த உணவுப் பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும், இயற்கை உணவுகள் சம்பந்தமாக கும்மிப்பாட்டு, கலைநிகழ்ச்சிகள் மூலம் விளக்கினர்.

  விழாவில், ஆண்டிமடம் மூலிகை மருத்துவர் சுந்தர், அரியலூர் புள்ளியியல் ஆய்வாளர் சுப்பிரமணியன், ஊட்டச்சத்து மையப் பொறுப்பாளர்கள் கிரிஜா, சுந்தரி, தமிழரசி, ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆண்டிமடம் குழந்தை வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பூபதி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai