சுடச்சுட

    

    அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், கணிதப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிக்கு உடையார்பாளையம் மாவட்ட கல்வி அலுவலர் ந. கணேசன் தலைமை வகித்தார். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தி முன்னிலை வகித்தார்.

    பயிற்சியில் கருத்தாளர்கள் அன்பழகன், அருள், வீரமணி, சாமிநாதன் ஆகியோர் பங்கேற்று பயிற்சியளித்தனர். பயிற்சியை அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து ஆய்வு செய்தார். நிறைவாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai